FETNA presents conference call on Immigration

அன்புடையீர் வணக்கம்.

 

நினைவூட்டல் – சிறப்பு பல்வழி அழைப்பு 

 

அமெரிக்காவில்  புதிய ஆட்சி மாற்றத்தினால்,   குடியேற்ற சட்டங்களில் பல முன்மொழியப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை  யாவரும் அறிந்திருப்பீர்கள்.  இச்சட்ட மாற்றங்கள்,  இங்கு புலம் பெயர்ந்து வாழும் நம்  மக்களிடம் பெரும் ஐயத்தையும்  ஒரு நிச்சயமற்ற உணர்வினையும்  ஏற்படுத்தியுள்ளது. எனவே  பேரவை நம்மவர்களிடம் ஏற்பட்டுள்ள நியாமான ஐயம் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெரும் வகையில், குடியேற்ற சட்டத்தரணி திருமதி கவிதா ராமசாமி அவர்களுடன் (Kavitha Ramasami is an Immigration Attorney with offices in New York, specializes in Business Immigration and is a member of American Immigration Lawyers Association) பல்வழி அழைப்பின் வாயிலாக ஒரு ஐயமகற்றும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 

உங்களுக்கு தற்போதைய குடியேற்ற சட்டதிட்டங்கள் தொடர்புடைய கேள்விகள் ஏதேனும்  இருப்பின் பேரவைச் செயலாளருக்கு  secretary@fetna.org  என்ற‌ மின்னஞ்சல் வாயிலாக  நாளை 02/09/17 இரவு கிழக்கு நேரம் 10:00 மணிக்குள்  அனுப்பி வைக்கவும்.  இத்தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும்  அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

 

கூட்ட நிரலி:

 

  1. கிழக்கு நேரம் இரவு 8:30 மணி முதல் 9:00 மணி வரை  –   நீங்கள் முன்னரே அனுப்பிய கேள்விகளுக்கு விளக்கம்.

  

  1. 9:00 மணியில் இருந்து 9:30 மணி வரை  பல்வழி அழைப்பில்  பங்குபெறுவோரின் கேள்விகளுக்கு விளக்கம்  அளிக்கப்படும். 

 

அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். பல்வழி அழைப்பிற்கு பலர் கலந்து கொள்ளவிருப்பதால் அனைவரும் 8:15 மணியில் இருந்து 8:25 மணிக்குள் அழைப்பில் இணையும்படி வேண்டுகிறோம், உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

 

பல்வழி  அழைப்பு விவரங்கள்:

தேதி:  2017, பெப்ரவரி மாதம், 10-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை (02/10/2017)                                              

நேரம்: இரவு கிழக்கு நேரம் 8:30 மணி முதல் 9:30 மணிவரை

பல்வழி அழைப்பு (By Conference Call)

Dial-in Number: (641) 715-3670 Access Code: 873905#

 

நன்றி,

இரமாமணி செயபாலன்,

செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

919-493-2812